மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

பிஇ: சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு!

பிஇ: சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு!

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்குக் கடந்த மே 3 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி வரை ரேண்டம் எண் வழங்கப்பட்டது. அதோடு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தப் பணி இன்று (ஜூன் 14) நிறைவடையவுள்ளது.

இன்று வரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள, உதவி மையத்தில் வரும், 17ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள 044 - 22359901, 22359920 ஆகிய தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வில் பங்கேற்க தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon