மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று (ஜூன் 14) தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தான் கடந்து வந்த பாதை

ஆப்கானிஸ்தான் அணி 2001ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியது. 2008ஆம் ஆண்டு வேர்ல்ட் கிரிக்கெட் லீக்கில் ஜெர்சி அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது. அன்று அந்தப் போட்டியில் வெற்றி இலக்கான 81 ரன்னை மிகவும் சிரமப்பட்டு 37.4 ஓவர்களில் அடித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் இதற்குப் பிறகு உள்ள 10 ஆண்டுகளில் அந்த அணியின் வளர்ச்சி பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணி பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் மெருகேறி வருகிறது. இன்று இந்த அணி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியான இந்தியாவை எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்தியாவில் ஆப்கானிஸ்தானின் செயல்பாடு

ஆப்கானிஸ்தான் அணி இந்திய மைதானங்களில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் சேர்த்து இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ளது. அதில் 13 ஆட்டங்களில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இரு அணிகளின் விவரம்

இந்தியா: அஜின்க்ய ரஹானே (கேப்டன்), ஷிகர் தவன், முரளி விஜய், புஜாரா, கருண்நாயர், ஹர்த்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், ஜடேஜா, உமேஷ்யாதவ், இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், ‌ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி.

ஆப்கானிஸ்தான்: அஸ்கர் ஸ்டானிக்ஸாய் (கேப்டன்), அப்சர் சசாய், அமீர் ஹம்சா, அஸ்மத்துல்லா, இஷானுல்லா, ஜாவீத் அகமது, முகமது ‌ஷசாத், முஜீப் உர் ரகுமான், நசீர் ஜமால், ரக்மத்ஷா, ரஷீத்கான், சயீத் ஷிரசாத், வபதார், யாமின் அகமது, ஜாகீர்கான்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon