மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

உரிமையைப் பாதுகாக்கும் சட்டம்!

காலா என்ட்ரி… நிலம் இல்லாத மக்களை, நிலம் உள்ளவர்கள் எவ்வளவு மோசமா நடத்துறாங்க என்பதைப் பார்த்து பொங்கி, நிலம் உள்ளவங்களுக்கு எதிரா போராடின ஒவ்வொருவரும் காலாதான். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, அம்பேத்கர்… இவங்க எல்லோருமே காலாதான். அப்படி அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா?

நிலம் என்பது அடிப்படையானது. எல்லோருக்கும் பொதுவானது. நிலத்தின் மீதான உரிமை எல்லோருக்கும் இருக்குன்னு சொன்னாங்க. அரசர்கள் ஆட்சி காலத்துல, இந்தக் குரல் அதிகமா எடுப்படலை. ஆனா, ஜனநாயக ஆட்சியில, இந்தக் குரல்களைச் சாத்தியமாக்குவதற்கு சில வழிகள் இருந்துச்சு. அதுல முதன்மையானது சட்டம்!

அதிகமா நிலம் வெச்சிருக்கிறவங்க, நிலம் இல்லாத மக்களுக்கு நிலம் கொடுக்கணும்னு சட்டம் கொண்டு வந்தாங்க. இது ஒரு சான்று. இதுபோல சிறுபான்மை மக்களுக்கு நிறைய சட்டங்களை இயற்றி அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கத் தனி மனிதராகப் போராடியவர்தான் நம்ம அம்பேத்கர். அவரோட இந்தப் பெரிய சேவையை வெளிப்படுத்தும் விதமாக காலா படத்துல ஒரு டயலாக் வரும்.

“எங்களுக்குச் சாதகமா சட்டங்கள் இருக்கிறதாலதாண்டா எங்களை இங்கையே வெச்சிருக்கீங்க. இல்லன்னா எப்பையோ கடலுக்கு வெளிய தூக்கி வீசிருக்க மாட்டீங்க.”

இதைவிட முக்கியமான இன்னொரு டயலாக் வரும். அதை நாம பெருசா எடுத்திருக்க மாட்டோம். ஆனா, அதுதான் அனைத்துச் சமத்துவத்துக்குமான அடிப்படை.

காலா (ரஜினி) என்ட்ரி சீன்ல, தாராவிய அழிச்சிட்டு கட்டப்போற கட்டடம் எப்படி இருக்கணும்னு கேட்கும்போது, அங்க இருக்கிற ஒரு அம்மா என்னென்ன வசதிகள் வேணும்னு சொல்லுவாங்க. அத கேட்ட காலா,

“அவங்க என்ன சொன்னாங்களோ, அதே மாதிரிதான் டிசைன் இருக்கணும். தாய் சொல்றதுதான் சட்டம்”னு சொல்லுவார்.

இதுல மிக முக்கியமான ஓர் அரசியல் பாடம் அடங்கியிருக்கு. அது என்னன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்…

- நரேஷ்

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon