மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

இந்தியாவுல வாழ இந்தி தெரியணும் அதானே: அப்டேட் குமாரு

இந்தியாவுல வாழ இந்தி தெரியணும் அதானே: அப்டேட் குமாரு

காலா படம் ரிலீஸாகி முழுசா ஒரு வாரம் இன்னும் முடியலை. அதுக்குள்ள படத்தோட கதை என்னன்னு தெரியாம பன்னீர் செல்வம் வந்து மாட்டிகிட்டாரு. குடிசைகளை அழிச்சுட்டு பெரிய வீடு கட்டிகொடுக்கப்போறாராம். அடக்கொடுமையே காலாவுல இது வில்லன் டயலாக்குன்னு அவருக்கு தெரியாது போல. எப்படியும் நம்மளை வாழ்த்தி இன்னைக்கு மீம் போடுவாங்கன்னு அவர் எதிர்பார்த்தா இறங்கி கலாய்ச்சுருக்காங்க. அத்தனை பேருமா படம் பார்த்துட்டாங்கன்னு பார்த்தா.. இங்க படம் பார்த்த பாதி பேரு சும்மா தான் இருக்காங்க. படத்தை பத்தி பேஸ்புக்ல படிச்சவங்க தான் ஒருத்தொருக்கு ஒருத்தர் மல்லு கட்டுறாங்க. இவராவது பரவாயில்லை பிட்னெஸ் வீடியோவை போட்டுட்டு நம்ம மோடி படுற பாட்டை பார்க்க முடியலை. போட்டோஷாப் அவங்க கட்சிகாரங்களுக்கு மட்டும் இல்ல எல்லாருக்கும் தெரியும்னு அவர்ட்ட யாராவது சொல்லுங்க. இல்லைன்னா நாலு மீம்ஸையாவது அவர்ட்ட காட்டுங்க.. நாட்டு பக்கம் இல்ல ட்விட்டர் பக்கம் கூட வரமாட்டார். இன்னொரு விஷயம் தெரியுமா இந்தி தெரிஞ்சா தான் செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை கிடைக்குமாம். பானி பூரி கடைக்கார அண்ணே நல்லா இந்தி பேசுவாரு. அவரு ஏன் வேலையை வேண்டாம்னு சொல்லிட்டு இங்க வந்தாருன்னு கேட்டுட்டு வாரேன்.. நீங்க அப்டேட்டை பாருங்க.

@RoShini_MK

மனுசனா பொறந்தா எதாவது சாதிக்கனும்யா...

சாரி சார் நான் கொழந்தையா தான் பொறந்தேன்...

@imparattai

டாக்டர்கிட்ட போகாம கடையில மூனுவேளை மாத்திரை வாங்கி சாப்பிடறது கீழ்தட்டுமக்கள்.

டாக்டர்கிட்ட பாத்துட்டு அவர் சொன்ன மாத்திரைகளை 7 நாளுக்கு 2 நாள்மட்டும் வாங்கி சாப்பிடறது நடுத்தரமக்கள்.

@Am_Jokerr

இப்போதெல்லாம் "தலைவலிக்கும், காய்ச்சலுக்கும்" காரணமாய் இருப்பது மொபைல் போன் தான்.

அம்மாவின் கண்டுபிடிப்பு !!!

@Thaadikkaran

இந்தியா முழுக்க வாட்ஸ் ஆப்பை தடை செய்ய மத்திய அரசு பரிசீலனை

அடுத்து என்ன, டிசைன் டிசைனா SMS பூஸ்டர் பேக் வருமோ..!

@Akku_Twitz

விஸ்வரூபம் 2' படத்திற்கு எதிர்ப்பு வந்தால் அதை அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார் #கமல்

ஜெயலலிதா உயிரோட இருந்திருந்தா நாட்டை விட்டு போறேன்னு ஒப்பாரி வெச்சிருப்பாப்ல

@ungalhabeeb

தாத்தா பாட்டிகளை நோய்களில் இருந்து காக்கும் மருந்து அவர்களின் பேரக்குழந்தைகளே...

@gips_twitz

பாகிஸ்தான் அத்துமீறல்! இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு

தூங்குகிறதா, தூத்துக்குடி துணை வட்டாச்சியர் அலுவலகம் ...

@ArunkumarTNR

சென்னையை குடிசையற்ற நகராக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் - ஓ.பன்னீர்செல்வம்.

அப்ப அமைச்சர்கள் எல்லோரும் கால்ஃப் மைதானம் கொண்ட பங்களா கட்ட போறீங்கனு சொல்லுங்க து.முதல்வரே!!

@Srilaksman0

இந்த வயதிலும் இப்படி நடிக்கிறார் என ஒரு நடிகனைப் புகழ்பவர் - ஏனோ இந்த வயதிலும் இப்படி உழைக்கிறார் என தந்தையை கூறியதில்லை.

@rahimgazali

தமிழகத்தில் 21 நாளில் ஆட்சி மாற்றம்- துரைமுருகன்

எத்தனை 21 நாட்களில் என்று தெளிவாச்சொல்லுங்க?!

@HAJAMYDEENNKS

4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார் மோடி - செய்தி

மோடி நாடாளுமன்றத்துல பேசியதை விட நாடு நாடாக போய் பேசியதுதான் அதிகம் !

@Kozhiyaar

'என்ன பிரச்சனை?' என்ற கேள்விக்கு 'ஒன்றும் இல்லை' என்ற பதில் பிரச்சனை ஒன்றும் இல்லை என்பதை விட, உன்னிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதே ஆகும்!!!

@Akku_Twitz

4 வருடத்தில் 19 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார் மோடி - செய்தி #

அந்த 19 நாளும் காங்கிரஸ் மேல குறை சொல்லிட்டு புதிய இந்தியா பிறக்க போகுதுனும் மட்டுமே பேசி இருப்பார்

@Thamilan143

''சென்னையை குடிசைகள் இல்லாத நகராக மாற்றுவதே நோக்கம்'' - பன்னீர்செல்வம்

// முதல்ல தமிழ்நாட்ட போராட்டக்களமா மாற்றாம இருங்க

@kathir_twits

ஒன்றும் அறியா எடப்பாடி ரெண்டு வருஷம் முதல்வராக இருப்பதை கூட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம்..!!

@meenammakayal

மூன்றாவது நபரைப் பற்றி பேசிக்கொள்ளாமல் எவ்வளவு நேரம் உங்களால் பேச முடிகிறதோ அதுவே உரையாடல்.. மிச்சதுலாம் நேரவிரயம்..

@vickytalkz

மத்திய அரசு பணிகளில் சேர அடிப்படை இந்தி அறிவு கட்டாயம்: செய்தி

அடுத்து என்ன இந்தியால வாழ இந்தி தெரியணும் அதானே..?

@CreativeTwitz

அதிர்ச்சி வாட்ஸப்புக்கு தடை~மத்தியரசு முடிவு

//மாப்பு வாட்ஸப்புக்கு வச்சிட்டானுங்கடா ஆப்பு...

@Siva Raman S

ப்ரோ நீங்க முகநூலுல மட்டும் தான் சமூக நீதி பேசுறீங்க...

ஆமா ப்ரோ... மேட்டர் என்னனா நீங்க 'இங்க கூட' சமூக நீதி பேச மாட்ரீங்க..

@கருப்பு கருணா

ஒங்களுக்காவ நாடு நாடா ஓடியோடி டியூட்டி பார்த்த ஒரு மனுசனை கடேசில இப்பிடி கல்லாங்குத்து பாறையில ஒக்கார வச்சிட்டீங்களேப்பா...

ச்சே..நன்றி கெட்ட ஒலகமடா..ஓம்ம்ம்ம்ம்...ஓம்ம்ம்ம்ம்!

-லாக் ஆஃப்

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon