மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

தமிழ்த் துறை : மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை!

தமிழ்த் துறை : மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை!

மாணவர்களிடையே தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முதுகலை தமிழ்த் துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என நெல்லை மனோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இது குறித்து மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சந்தோஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தென் மாவட்டங்களில் தமிழில் முதுகலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால் மாணவர்களிடையே தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் இந்த ஆண்டு முதல் முதுகலைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 2018-2019ஆம் கல்வி ஆண்டில் தமிழ்த் துறையில் முதுகலைப் படிப்புக்கு சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் கிடையாது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon