மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ரஞ்சியில் இடம்பெறுவாரா சச்சின் வாரிசு?

ரஞ்சியில் இடம்பெறுவாரா சச்சின் வாரிசு?

அர்ஜுன் டெண்டுல்கர், இந்த ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரின் பயிற்சியில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரின் சமீபத்திய கிரிக்கெட் சாதனைகள் தேர்வாளர்களைக் கவர்ந்ததையடுத்து, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய யு19 அணி, இலங்கை அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் நான்கு நாட்கள் விளையாடப்படும் டெஸ்ட் போட்டியாகும்.

இந்நிலையில், ரஞ்சிக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் அர்ஜுன் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சீனியர் வீரர்களுடன் தனது பயிற்சியை மேற்கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார் அர்ஜுன்.

மேலும், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜூனியர் உலகக் கோப்பை தொடரிலும் வயது வித்தியாசம் காரணமாக அர்ஜுன் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ரஞ்சி பயிற்சியில் இடம்பெறாததால் ரஞ்சிக் கோப்பைக்கான அணியில் அர்ஜுன் இடம்பிடிப்பாரா என சந்தேகம் வலுத்திருக்கிறது. ஆனாலும் அது குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon