மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வருவாய் இழப்பில் நெட்வொர்க் துறை!

வருவாய் இழப்பில் நெட்வொர்க் துறை!

இந்தியாவின் தொலைத் தொடர்புத் துறை ஜனவரி - மார்ச் காலாண்டில் 7 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இதுதொடர்பாக ஜெபரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘ஜனவரி மாதம் முதலே ஜியோ நிறுவனமும், அதற்குப் போட்டியாக இதர நெட்வொர்க் நிறுவனங்களும் கட்டணக் குறைப்பில் ஈடுபட்டு வந்ததால் இந்தியத் தொலைத் தொடர்புத் துறை வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இத்துறையின் தனிநபர் சராசரி வருவாய் மாதத்துக்கு 11 சதவிகிதம் குறைந்து ரூ.70 ஆக உள்ளது. மேலும், ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளதால் சந்தைப் பங்குகளும் 600 அடிப்படைப் புள்ளிகள் குறைந்துள்ளன. குறிப்பாக ஐடியா நெட்வொர்க் நிறுவனம் இக்காலாண்டில் தனது சந்தைப் பங்கில் 30 அடிப்படைப் புள்ளிகளை இழந்துள்ளது’ என்று கூறியுள்ளது.

ஐடியாவின் சந்தைப் பங்குகள் குறைந்துள்ள நிலையில் ஜியோ நெட்வொர்க் நிறுவனம் 19.1 சதவிகித சந்தைப் பங்குடன் ஐடியாவைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. எனினும், 50 சதவிகித சந்தைப் பங்கை ஈட்டுவதே ஜியோ நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், புதிதாக உருவாகும் நெட்வொர்க் நிறுவனம் ஜியோவின் வளர்ச்சியைத் தடுக்க வாய்ப்புள்ளது. 26 சதவிகித சந்தைப் பங்குடன் ஏர்டெல் நிறுவனம் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon