மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பிரபலங்களைத் தொடரும் பாலியல் தொல்லைகள்!

பிரபலங்களைத் தொடரும் பாலியல் தொல்லைகள்!

ஒரு நைட்டுக்கு ரேட் என்ன என்று கேட்டவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாலிவுட் நடிகை சோபியா ஹயாத்.

நடிகையும் மாடலுமான சோபியா ஹயாத் சல்மான் கான் 2013ஆம் ஆண்டு நடத்திய இந்தி பிக் பாஸ் 7ஆவது சீசனில், 84 நாட்கள் கலந்துகொண்டு பிரபலமானவர். கன்னியாஸ்திரியாகிவிட்டேன் என்று அறிவித்த சோபியா, பின்னர் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ரோமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்தார். கணவரால் பல பிரச்சினைகளை சந்தித்துவந்த சோபியா, தனது உடைமைகளை திருடி, அவற்றை விற்பனை செய்துள்ளார் என அவர் மீது புகார் கூறினார்.

இது போன்ற காரணங்களினால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இச்சூழலில், “ஒரு இரவுக்கு உங்களின் ரேட்டு என்ன” என்று ஆபித் ஹுசைன் என்பவர் சோபியா ஹயாத்திடம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுள்ளார்.

இதைப் பார்த்த சோபியா, “முதலில் உங்க அம்மா, சகோதரி, மனைவியிடம் கேளுங்கள். ஒரு இரவுக்கு ரேட்டு என்ன என்று அவர்கள் சொல்வார்கள்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

மேலும் சோபியாவின் பதிலைப் பார்த்த அந்த நபர் மீண்டும் அசிங்கமாகப் பேசியுள்ளார், “அவர்களுக்கு உங்களைப் போன்று உடம்பைக் காட்டத் தெரியாது” கூறியுள்ளார்.

இதற்கு பதில் கூறும் விதமாக, “உன்னைப் பெற்றெடுத்தபோது உன் தாய் தனது உடலை காண்பித்திருப்பார், ரமலான் மாதத்திற்கு மதிப்பே இல்லையா” என்று சோபியா, ஆபித் ஹுசைனிடம் கேட்டுள்ளார்.

இது இப்படியே தொடர்ந்துகொண்டிருக்க, அதைக் கண்ட சோபியாவின் ரசிகர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடர்பவர்கள் என சிலர் ஹுசைனின் அக்கெளண்டை டிஆக்டிவேட் செய்துள்ளனர். இது சோபியாவிற்கு முதல் முறை அல்ல; பல முறை இது போன்று சிலரால் அவருக்கு சமூக வலைதளங்களில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வு சோபியாவுக்கு மட்டுமல்ல; திரைத் துறையில் பிரபலமாக இருக்கின்ற பல பேருக்கு இது போன்ற இன்னல்கள் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்குத் தீர்வு என்ன என்பதுதான் நீண்ட நாள் கேள்வியாக இருக்கிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon