மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

அலுவலகப் பிரச்சினைக்கு புது செயலி!

அலுவலகப் பிரச்சினைக்கு புது செயலி!

பணியாளர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை (ஹெச்.ஆர்) இடையேயான தகவல் தொடர்பை எளிமைப்படுத்த புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்தது பிரபல பணியாளர் மேலாண்மை சார் தொழில்நுட்ப நிறுவனமான டார்வின்பாக்ஸ். இந்நிறுவனம், பணி நிறுவனங்களில் பணியாளர்களுக்கும். ஹெச்.ஆருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை எளிமையாக்கும் விதமாக புதிய செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘டார்வின்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இச்செயலி, பணியில் நிகழும் பிரச்சினைகளை ரியல் டைம் எனும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

‘வாய்ஸ்பாட்’ எனும் தொழில்நுட்பத்தில் இயங்கும் இதில், கொடுக்கப்படும் தகவலுக்கு ஏற்ப, செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகிற வசதிகளைக்கொண்ட இயந்திர வடிவமைப்பும் உள்ளது. இதன்மூலம் விடுமுறை, நிர்வாக சிக்கல், பணியிட பிரச்சினை, வருகைப்பதிவு, பணியிடமாற்றம், பணிச்செயல்பாடு மற்றும் பணிச்சுமை என எல்லாவற்றையும் தேவைப்படும் நேரத்தில் உடனடியாகப் பரிமாறிக்கொள்ள முடியும் என்பதாகக் குறிப்பிட்டுள்ளது டார்வின்பாக்ஸ்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon