மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பழனி: விதைப் பந்துகள் தூவல்!

பழனி:  விதைப் பந்துகள் தூவல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனப் பகுதியில் விதைப் பந்துகள் தூவும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்தப் பருவ மழையைப் பயன்படுத்தும் வகையில் பழனி வனப் பகுதியில் அடர்த்தி குறைந்த இடங்களில் பல்வேறு செடி, மரங்களின் விதைகளை வண்டல் மண், மண்புழு உரம், நீர் கலந்து அதனைச் சிறு சிறு உருண்டையாக உருட்டி வனப் பகுதியில் தூவும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விதைப் பந்துகள் குழி தோண்டியும் புதைக்கப்படுகின்றன. இதன் மூலம் வனப் பகுதியில் அடர்த்தியை அதிகரிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விதைப் பந்துகள் என்றால் என்ன?

விதைப் பந்துகளில் இருக்கின்ற விதைகள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் உயிரோட்டத்துடன் இருக்கும். பூச்சி, புழுக்கள் பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க முடியும்.

மழைக்காலத்தின் போது இவற்றை மண்ணில் தூவுவதால் இயற்கையாக வளருவது போன்று இம்மரங்கள் வளரும்.

நெகிழி பைகளில் தாவரங்களை நடவு செய்து வளர்ப்பதை விட இயல்பாகவும், வேகமாகவும் இந்த வகை மரக்கன்றுகள் வளரும்.

அழிந்து வரும் அரிய வகை மரங்களின் இனங்களைக் கூட இந்த வகையில் விதைப் பந்துகளாக தயார் செய்து பாதுகாத்து நடவு செய்யலாம்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon