மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வந்தாச்சு உபெரின் புது செயலி!

வந்தாச்சு உபெரின் புது செயலி!

உபெர் நிறுவனம் உபெர் லைட் எனும் தனது புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் இயங்கிவரும் முன்னணி கால் டாக்ஸி நிறுவனம் உபெர். குறிப்பாக இந்தியாவில் இதன் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம். புதுப் புதுத் திட்டங்களை வடிவமைத்து வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கும் இந்நிறுவனம் தற்போது உபெர் லைட் எனும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஏற்கனவே உபெருக்கு என தனிச் செயலி இருக்கிறது. ஆனாலும் அந்த செயலியினுடைய லைட்டர் வெர்ஷனாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஆண்ட்ராய்டு போன்களில் வெறும் 5 எம்பியிலேயே டவுன்லோடு செய்துகொள்ள முடியும். 300 மில்லி செகண்ட் வேக செயல்பாட்டில் இயங்கும் இந்தச் செயலியானது 99 சதவிகித ஆண்ட்ராய்டு போன்களில் சப்போர்ட் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் இன்னும் இது முழுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆம். தற்போது ஜெய்ப்பூர், ஐதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பைலட் வெர்சனாக மட்டுமே உபெர் லைட்டை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், இனிமேல்தான் மற்ற நகரங்களிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon