மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

மனித உரிமை ஆணையம் ஆர்டிஓக்கு நோட்டீஸ்!

மனித உரிமை ஆணையம் ஆர்டிஓக்கு நோட்டீஸ்!

இருளா் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு சாதி சான்றிதழை தாமதமாக்கியதற்கு வருவாய்த்துறை அதிகாரி கண்டிப்பாக ஆஜராக வேண்டுமென்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இருளர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.விஜய் என்ற மாணவர் சாதிச் சான்றிதழுக்காக விழுப்புரம் மாவட்டம் வருவாய்த்துறை அதிகாரி கே சரஸ்வதியிடம் விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் தரப்படாததால் விஜய் அக்டோபர் மாதத்திலிருந்தே 4 முறை தொடர்ந்து விண்ணப்பித்து வந்தார்.அவர் பிஎஸ்சி இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி சேருவதாக இருந்தார். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இரு வாரங்களே உள்ள நிலையில் சாதித் சான்றிதழ் பெறுவதற்காக வருவாய்த்துறை அலுவலகத்திற்கு பல முறை சென்று வந்துள்ளார். ஆனால் இதுவரை சான்றிதழ் அளிக்கப்படவில்லை இது தொடர்பான செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியானது. இந்த செய்தியை அடிப்படையாகக்கொண்டு தானே முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் இதை வழக்காக எடுத்துக்கொண்டது. வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம் வருவாய்த்துறை அதிகாரி சரஸ்வதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon