மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை!

வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மை!

வேலைவாய்ப்பு தரவு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முன்னாள் தலைமை புள்ளியியலாளர் டிசிஏ ஆனந்த் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெரியவந்தது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் அரசு முன்னோக்கிச் செல்கிறது. வெளிப்படைத்தன்மையால் பயனாளர்கள் மற்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். வேலைவாய்ப்பில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்க டிசிஏ ஆனந்த் தலைமையிலான தொழில்நுட்பக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு,வேலைவாய்ப்பின்மை மற்றும் காலாண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஐந்தாண்டிற்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கான ஆய்வை தொழில்முறைப் பணியகம் நடத்தி முடித்ததையடுத்து, இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆறாவது ஆண்டுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கான (2016-2017) ஆய்வுகள் முடியப்பெற்று, தரவு உள்ளீடு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வு செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும்.

வேலைவாய்ப்பு குறித்த காலாண்டுத் தரவுகளில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. புதிய நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களின் வேலைவாய்ப்பை ஒப்பிட்டு அதில் மாற்றத்தை ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் பத்துக்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் வேலைவாய்ப்பு கணக்கெடுப்பில் இடம்பெறவில்லை. இந்தக் கணக்கெடுப்பின்படி, மொத்தமுள்ள 47 கோடி பணியாளர்களில் 2.40 கோடி பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

பிரதான் மந்திரி ரோஜ்கர் புரோட்சஹான் யோஜனா திட்டம் மூலம் 58,400 நிறுவனங்களில் 46.36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ரூ.855 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon