மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

நீர் மேலாண்மையில் தடுமாறும் தமிழகம்!

குப்பை மேலாண்மையில் தமிழகம் முன்னுதாரணமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்று நேற்று பார்த்தோம். ஆனால், நீர் மேலாண்மையைப் பொறுத்தவரை தமிழகம் மிகவும் தடுமாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ள கணிப்புகள் அதற்கான ஆதாரமாக உள்ளன.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கண்காணிப்புக் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தது மத்திய நிலத்தடி நீர்மட்ட வாரியம். சமீபத்தில் வெளியிடப்பட்ட அதன் ஆய்வறிக்கையில், நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடம் பிடித்திருக்கிறது. தமிழகத்திற்கு அடுத்து பஞ்சாப்பும் ஆந்திராவும் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள 526 கண்காணிப்புக் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அதைக் கடந்த ஆண்டுகளின் ஆய்வறிக்கைகளோடு ஒப்பிட்டுப் பார்த்ததில், தமிழகத்தில் உள்ள 87 சதவிகிதக் கண்காணிப்புக் கிணறுகளில் நிலத்தடி நீர் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

நிலத்தடி நீர் குறைந்துவரும் விகிதம் அதிகமாகிக்கொண்டுவருவதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பகுதியினர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நிலத்தடி நீரை நம்பியுள்ள நிலையில், இந்தச் செய்தி நாம் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது.

- நரேஷ்

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon