மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

பாப் அப் செல்ஃபியுடன் வெளியாகியுள்ள புதிய போன்கள்!

பாப் அப் செல்ஃபியுடன் வெளியாகியுள்ள புதிய போன்கள்!

விவோவின் நெக்ஸ் எஸ் மற்றும் நெக்ஸ் ஏ மாடல் போன்கள் நேற்று (ஜூன் 12) சீனாவில் வெளியிடப்பட்டன.

நெக்ஸ் எஸ் மாடலைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 845 SoC, 8GB RAM, 256GB இன்டர்னெல் மெமரி,6.59 இன்ச் எச்.டி டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் ஃபிங்கர் பிரின்ட் வசதியுடன் வெளியாகியுள்ளது. இதன் விலை சுமார் ரூ. 47,400 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிஸ்பிளேவுக்கு கீழே ஃபிங்கர் பிரின்ட் வசதிகொண்டு இதுவரை வந்த போன்களில் இது மூன்றாவது புதிய வடிவத்தைக் கொண்டுள்ளதாகக் கூறும் விவோ, வழக்கமான சென்சாரைவிட இது 10 சதவிகிதம் வேகமாக இயங்கக்கூடியது எனக் கூறியிருக்கிறது.

அடுத்த மாடலான நெக்ஸ் ஏவைப் பொறுத்தவரை ஸ்னாப்டிராகன் 710 SoC, ஆண்ட்ராய்டு 8.1ஓரியோ இயங்குதளம், 6GB RAM, 128GB இன்டர்னெல் மெமரி போன்ற வசதிகளுடன் வந்துள்ளது. இதன் தோராய விலை ரூ. 41,000. இந்த இரண்டு போன்களிலும் பாப் அப் செல்ஃபி வசதி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon