மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

மருத்துவ முகாம் அமைக்கக் கோரிக்கை!

மருத்துவ முகாம் அமைக்கக் கோரிக்கை!

சத்தியமங்கலம் அருகே வைரஸ் காய்ச்சலால் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த ஒரு வாரக் காலமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டும் காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை என்று மருத்துவர்கள் கூறுவதாகக் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே சுகாதாரத் துறையினர் உடனடியாகச் சிறப்பு மருத்துவக் குழு கொண்ட முகாம் அமைத்துக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon