மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

ஸ்கூட்டர் விற்பனையில் பின்னடைவு!

ஸ்கூட்டர் விற்பனையில் பின்னடைவு!

சென்ற மே மாதத்தில் ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் 1.4 விழுக்காடு சரிவடைந்துள்ளது. 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனை தற்போது சரிந்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற மே மாதத்தில் மொத்தம் 5,55,467 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், இது 2017ஆம் ஆண்டின் மே மாத விற்பனையை விட 1.4 விழுக்காடு குறைவு எனவும் தெரிவித்துள்ளது. எனினும் சென்ற ஏழு மாதங்களாக மந்தமாகவே இருந்த மோட்டார் சைக்கிள் விற்பனை மே மாதத்தில் 15.2 விழுக்காடு வளர்ச்சி கண்டு, மொத்தம் 12.2 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருமண சீசனை முன்னிட்டு மோட்டார் சைக்கிள்களுக்கான தேவை அதிகமாக இருந்ததால் அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.

பயணிகள் வாகன விற்பனை 19.6 விழுக்காடும், பயன்பாட்டு வாகனங்களுக்கான விற்பனை 17.5 விழுக்காடும் உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் ஸ்விஃப்ட் கார்களும், ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ-10 மாடல் கார்களும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வர்த்தக வாகன விற்பனையைப் பொறுத்தவரையில், 43 விழுக்காடு உயர்வுடன் மொத்தம் 76,478 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக வாகன விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் துணை இயக்குநரான சுகடோ சென் கூறுகிறார்.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon