மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

வங்கதேசத்தில் கனமழை: ரோஹிங்கியா அகதிகள் தத்தளிப்பு!

வங்கதேசத்தில் கனமழை: ரோஹிங்கியா அகதிகள் தத்தளிப்பு!

வங்கதேசத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அகதி முகாம்களின் குடியிருப்புகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு பருவ மழையானது இரண்டு நாட்களாகப் பெய்து வருவதால் சுமார் 9,000 பேர் மழையால் பாதிப்படைந்துள்ளனர். நிலச்சரிவு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் ரோஹிங்கியா அகதிகள் 2 பேர் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரோஹிங்கியா அகதிகள் சுமார் 30,000க்கும் அதிகமானோர் மலையை ஒட்டியிருக்கும் ஆபத்தான குடியிருப்புகளில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.

மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் மற்றும் ஒடுக்கு முறை காரணமாக சுமார் 7,00,000 முஸ்லிம்கள் அகதிகளாக அண்டை நாடான வங்கதேசத்திற்குக் குடிபெயர்ந்தனர். குடிபெயர்ந்த அகதிகள் தற்காலிகக் குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டனர். குடியிருப்பு வீடுகள் தகர சீட்டுகளில் அமைக்கப்பட்டுக் கொடுத்ததால் சிறிய அளவிலான இயற்கை சீற்றங்களுக்கு கூட பாதிப்புக்குள்ளாவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon