மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நிலத்துக்காக நடக்கும் போர்!

போர். உள்ளூர் போர்ல இருந்து உலகப் போர் வரைக்கும் எல்லாத்துக்கும் அடிப்படை அல்லது முக்கியக் காரணியாக இருப்பது நிலத்தை அடையணும்ங்கிற அதிகார வெறிதான். ஹிஸ்டரி புக்குல நீங்க படிச்ச போர்கள்ல முக்காவாசி போர்கள் இந்த நிலத்துக்கான சண்டையாதான் இருக்கும். இதைவிட ஒரு மிக முக்கியமான பிரச்சினை இருக்கு குட்டீஸ்.

உங்க வகுப்புல படிக்கிற உங்க சக நண்பர்கள், உங்களை அடிமையா நடத்துனாங்கனா எப்படி இருக்கும்னு யோசிச்சுக்கூட உங்களால பார்க்க முடியாது நண்பர்களே... ஒரு கற்பனைக்குன்னு வெச்சிக்கோங்க, உங்க நண்பன்கிட்ட ஒரு நாற்காலி இருக்கு. உங்ககிட்ட இல்ல. அந்த நாற்காலி, அவனுக்கு அவங்க குடும்பத்துல இருந்து வந்தது. ஆனா, உங்க குடும்பத்துல அப்படி ஒரு நாற்காலியே இல்ல. நாற்காலி இல்லைங்கிற ஒரே காரணத்துக்காக, அந்த சக மாணவன் உங்களை தனக்கு அடிமையா இருக்கணும்னு சொல்றது எவ்ளோ பெரிய பாவம்.

நியாயமா பார்த்தா, அவனும் உங்ககூட கீழ உட்காரணும். இல்லைனா, உங்களுக்கு ஒரு நாற்காலி கிடைக்க ஏற்பாடு செய்யணும். அதுதான் சமத்துவம்.

ஆனா, வரலாறு எப்பவுமே இவ்வளவு சமத்தா இருந்ததில்லை. அந்த நாற்காலிதான் நிலம்னு வெச்சிக்கோங்க. நிலம் இல்லாத மனிதர்கள், நிலம் இருக்கும் மனிதர்களுக்காக வேலை செய்யணும்னு சொன்னாங்க. அடிமையா இருக்கணும்னு சொன்னாங்க. நிலம் இல்லாத ஒரே காரணத்துக்காக அந்த மக்களை இழிவுபடுத்தி, அவங்ககிட்ட இருந்த உரிமைகளை எல்லாம் பிடுங்கினாங்க.

இந்தக் கொடுமைகள் எல்லாம் நடக்கும்போதுதான் என்ட்ரி ஆகுறாரு காலா!..

- நரேஷ்

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon