மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும்!

கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும்!

காற்றில் கரியமில வாயு அதிகமானால் அரிசியின் சத்து குறையும் என 10 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட அரிசியை உணவாக மேற்கொள்ளும் 10 நாடுகளில் அறிவியலாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது, 'அரிசியில் சத்து குறைவது காலநிலை மாற்றத்தின் நேரடி விளைவாக அல்ல. அரிசி உணவு சில புரதச்சத்துகளையும் குறிப்பாக பி1, பி2, பி5, பி9 மற்றும் ஈ ஆகிய வைட்டமின்களையும் அளிக்கிறது. அரிசியின் மீது தொடர்ந்து கரியமில வாயு படிவதால் இத்தகைய சத்துகள் குறைகின்றன. உலகம் முழுவதும் 600 மில்லியன் மக்கள் அரிசி உணவைச் சார்ந்துள்ளனர்.'

இவ்வாறு அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது