மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 ஜுன் 2018

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்!

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 9

ரஞ்சித்தின் காலா திரைப்படம் உலகம் முழுவதும் முழுமையாக ரிலீஸ் ஆகவில்லை

பெரும் பகுதி வருவாய் வர வேண்டிய தமிழகத்தில் 450 திரையரங்குகளுக்கு மேல் காலா ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் படத்திற்கு இதுவரை இருந்த மாஸ் ஓபனிங், தமிழகத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே ரசிகர்களால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததால் சாத்தியமானது.

இயல்பாக ரஜினி படத்தை ஓபனிங் ஷோவில் பார்க்க வேண்டும் என்ற தன்னெழுச்சி அவரது ரசிகர்கள், பொதுவான சினிமா ஆர்வலர்கள் மத்தியில் மந்தமாகவே இருந்தது.

இன்று காலை 7 மணி காட்சிக்கும், பிற்பகல் காட்சிக்கும் மால் தியேட்டர்களில் ஆன்லைன் புக்கிங்கில் காலா படத்திற்கு எளிதாக டிக்கெட் கிடைத்தது.

இதற்குக் காரணம் காலா பெரு நகரங்களில் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டதுதான்.

தமிழகம் முழுவதும் இன்றைய தினம் 2500 காட்சிகள் காலா திரையிடப்படுகிறது.

பெரு நகரங்கள், ஆன்லைன் முன்பதிவு வசதி உள்ள குறிப்பிட்ட தியேட்டர்களில் 80% டிக்கெட்டுகள் தியேட்டர் நிர்வாகங்களால் கையகப்படுத்தபட்டு தங்கள் வசதிக்கு ஏற்ப வெளியில் டிக்கெட் விற்கப்பட்டுவருகின்றன.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களை தவிர்த்து சிறு நகரம், வட்ட, ஒன்றியத் தலைநகரங்களில் உள்ள தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் டிக்கெட் விலையும் கூடவில்லை, டிக்கெட் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

2500 காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சியாக இருக்கும் பட்சத்தில் சுமார் 22 கோடி வரை மொத்த வசூல் ஆக வேண்டும்.

அதற்கான வாய்ப்பு இல்லை என்பதே பகல் காட்சி வசூல் நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

மாஸ் ஓபனிங் இல்லாதது ஏன்?

காலாமுதல் நாள் மொத்த வசூல்

ரசிகர்களின் மனநிலை

திரையரங்கு உரிமையாளர்கள் குரல்...

நாளை பகல் 1 மணிக்கு

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

வியாழன், 7 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon