மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா பறக்கலாம்!

குறைந்த கட்டணத்தில் அமெரிக்கா பறக்கலாம்!

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் பயணிக்கக் குறைந்த கட்டணத்திலான சலுகையை ஐஸ்லாந்தைச் சேர்ந்த வாவ் ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.13,499 கட்டணத்தில் அமெரிக்கா செல்லும் வாவ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் எஸ்இ ஏ330 நியோ விமானம் டிசம்பர் 7 முதல் இயக்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து வட அமெரிக்கா செல்லும் பயணிகளுக்கு இந்தக் குறைந்த கட்டண விமானச் சேவை சிறப்பானதாக இருக்கும் என்றும் ஐஸ்லாந்தின் ரெய்ஜாவிக் விமானத் தளம் வழியே இந்த விமானச் சேவை வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் கூறுகிறது.

எமிரேட்ஸ் போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டணத்தில் பாதி கட்டணம்தான் என்பதால் வாவ் ஏரின் இச்சலுகை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. காலைப் பொழுதில் டெல்லி விமானத் தளத்திலிருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணி நேரத்தில் ஐஸ்லாந்தின் ரெய்ஜாவிக் நகரைச் சென்றடைய 11 மணி நேரங்கள் ஆகும். இரண்டரை மணி நேர இடைவேளைக்குப் பின் அங்கிருந்து 6 மணி நேரத்தில் வாஷிங்டன் சென்றடையும்.

இந்த விமானச் சேவை ஆடம்பரமற்ற விலை குறைந்ததாக இருக்கும் எனவும், எளிய மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் எனவும் வாவ் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மோகென்சென் டிஎன்ஏ இந்தியா ஊடகத்திடம் கூறியுள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon