டிஜிட்டல் இந்தியா ஹேன்னு நாடு நாடா போய் பெருமை பீத்துனவரு மானத்தை ட்விட்டர்ல வச்சு நாறடிக்குறதை நினைக்கும் போது தான் மனசு கேக்கல. ஆன்லைன்லயே எல்லாத்தையும் வாங்க, விக்கப் பாருங்க கருப்பு பணத்தை அழிச்சிரலாம்ன்னு சொன்ன அவருக்கு நல்லது பண்ணுறேன்னு ஒருத்தர் அமேசான்ல 7 எம்.எல்.ஏ கிடைக்குமா கர்நாடகாவுல பெரும்பாண்மையை நிரூபிக்கனும்னு கேட்டுருக்காரு. இதை பார்த்துட்டு அந்த அமேசான் ஆபிசர் வேலையை விட்டே போயிடலாம்னு முடிவு பண்ணிருப்பாரு. நல்ல வேளை ஓ.எல்.எக்ஸ்ல பார்க்காம விட்டாரே.. ஒரு நிமிஷம் அப்டேட்டை பாத்திகிட்டு இருங்க.. நான் போய் தமிழ் நாட்டுல அவங்க எம்.எல்.ஏலாம் கரெக்டா இருக்காங்களான்னு எண்ணி பார்த்துட்டு வந்துடுறேன். ஏன்னா ஓனருக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க மாட்டாங்க. நேரா பெங்களூர் போய் எங்களையும் சேர்த்துக்கங்கன்னு நின்றுவாங்க.
@sundartsp
தேர்வில் ரேங்க் பட்டியலை வெளியிட தடை விதிச்ச மாதிரி மார்க் எவ்வளவுன்னு கேக்குறவங்க மேலே குண்டர் சட்டம் பாயும்னும் சொன்னா நல்லா இருக்கும்.
@gips_twitz
கதை திரைக்கதை வசனம் இயக்கம் ஒளிப்பதிவு இசை பாடல் பாடகர் நடிகர் நடன இயக்குனர் சண்டை பயிற்சி எல்லாமே டி.ராஜேந்தர் மாதிரி
ஆளுநர் கல்வித்துறை காவல்துறை நீதித்துறை தேர்தல் ஆணையம் எல்லாமே மோடி ...
@azam_twitz
பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிய நான் ஒன்றும் எடப்பாடி பழனிச்சாமி இல்லை.. :- குமாரசாமி
//கோவில் அர்சனை வீடியோ பழனிச்சாமிக்கு பதிலா குமாரச் சாமிக்கு பன்னியிருக்கலாம்!!!
@ShivaP_Offl
தினமும் நொடிக்கு நொடி அடித்தாலும் பண்டிகை காலங்களில்கூட தள்ளுபடி தராமல் சுத்தி சுத்தி அடிப்பதுதான் வாழ்க்கையின் விளையாட்டு...!!
@ShivaP_Offl
தனி கட்சி மெஜாரிட்டி என்று சொல்லி ஆட்சி அமைத்தது
ஓல்டு ஸ்டைல்,
எல்லா கட்சிகளும் சேர்ந்து ஆட்சியமைக்க போராடுவதுதான் நியூ ஸ்டைல் ..!!
@Satya_Twtz
கவர்னர் விரும்பினால் யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம்...
எங்க அப்ப சின்னம்மாவ அழையுங்க பார்க்கலாம்..
@mohanramko
ஒரு ஆணுக்கு பின்னாடி பெண் இருப்பதெல்லாம் 'க்யூ'வில் மட்டுமே சாத்தியம்
@Kappikulam J Prabakar
என்னடா நாடு இது..?
ஒரு ஓட்டுக்கு 200 ரூவா, 500 ரூவா கொடுத்துட்டு
அவங்களோட ஒரு ஓட்டுக்கு 100 கோடிக்கு பேரம் பேசுறாங்க..
கொஞ்சமாவது மனச்சாட்சி வேண்டாம்…
@நாச்சியாள் சுகந்தி
ஊழலை ஒழித்தோம் எப்படி?
ஒரே ஒரு எம்.எல்.ஏவை வாங்க 100 கோடி செலவழித்தோம்.
100 கோடி எங்கிருந்து வந்துச்சு
ஊழலை ஒழித்தோம்
எப்படி?
ரெய்டு போவோம்... பயமுறுத்துவோம்...மிரட்டுவோம்...பேரம் பேசுவோம்... கணக்குல வராத காசெல்லாம் எங்க கணக்குல வரவு வைப்போம்
இப்ப சொல்லுங்க...ஊழல ஒழிச்சோமா இல்லியா?
சரி இப்ப என்ன பண்ணலாம்...
இதை சிபிஎஸ்.ஈ வரலாற்று புக்குல புள்ளைங்களுக்கு பாடமா வைப்போம்...
ரைட்டூ
@MJ_twets
வெட்டி வேலை செய்பவர்களின் தர வரிசையில் முதல் இடம் பிடிக்கிறார் சலூன் கடைகாரர்.,!
@mosakkara
ஒரு காசோலையில் நிரப்பப்பட்ட பணத்தை விட அந்த கணக்கில் ஒரு ரூபா குறைவா இருந்தா கூட அந்த காசோலை பாஸ் ஆகாது.
ஆனா ஏழு எம்.எல்.ஏ கம்மியா வச்சிகிட்டு 15 நாள் முதல்வரா இருப்பாராம்!!
@Aravindan_kpm
Veg செய்யவே விரும்புகின்றனர் சைவர்கள்
அனைத்தையும் வச்சி செய்யவே விரும்புகின்றனர் அசைவர்கள்
= சோறு அதானே எல்லாம்
@sultan_Twitz
ஜனநாயகத்தை காக்க விடுதிக்கு சென்று தங்கவும் தயார் - சித்தராமையா
இதுக்கெல்லாம் விதை போட்டது எங்க சின்னம்மாங்கிற மறந்துறாதப்பே..!
@ajmalnks
மக்களின் வரிப்பணத்ணை செலவழித்து தேர்தல் நடத்தி பின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதற்கு பதில் பேசாமல் தேர்தலே நடத்தாமல் விட்டுவிடலாம்.
மக்களின் வரிப்பணம்தான் வீணாகிறது.
@Thaadikkaran
விவசாயிகளுக்கான கட்சி பாஜக தான்; காவிரி நீரும் தமிழகத்திற்கு வரும் : தமிழிசை சௌந்தரராஜன்
கார்ப்பரேட்டுக்குன்னு அரசல் புரசலா பேசிக்குறாங்க அக்கா..!!
@imparattai
இந்தியாவில் இப்போது நடப்பது Infinity war,
இங்கே டாடி தானோஸ் தான் ஒட்டுமொத்த இந்தியாவை கைக்குள் கொண்டுவர போராடும் வில்லன்? கதாநாயகன்? முடிவை வெள்ளித்திரையில் அல்ல விரைவில் நேரில் பார்க்கலாம்!
@thoatta
எடியூரப்பா ஆட்சி கலைஞ்சா இந்த 56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செல்லுமா இல்ல வேலைக்காவாதா?
@soterdani
கல்யாணத்திற்கு பிறகு கணவன்மார்கள் கவனமாக செய்யவேண்டிய முக்கியமான வேலை
"குக்கர் அடிக்கும் விசில்களை எண்ணுவதுதான்"
@somu_twitz
நான் எடியூரப்பாவாக இருந்தால் தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன் - ப.சிதம்பரம்...
சிவகங்கை தொகுதி நியாபகம் இருக்கா மிஸ்டர் ரீ கவுண்டிங்
-லாக் ஆஃப்