ஓரினச்சேர்க்கையைச் சட்ட விரோதமாகக் கருதும் இந்திய தண்டனை சட்டம் 377- வது பிரிவை நீக்கக் கோரி ஐஐடிமாணவர்கள் மாணவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கச் சம்மதம் தெரிவித்துள்ளது உச்ச நீதி மன்றம்.
கடந்த திங்கள் அன்று ஐஐடி மாணவர்கள் 20 (முன்னாள் மாணவர்கள் உட்பட) பேர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர், அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது “இந்திய தண்டனை சட்டம் 377- வது பிரிவானது, அரசியல் அமைப்புசட்டம் அளித்திருக்கக் கூடிய அடிப்படை உரிமைகளை பரிக்கக் கூடியதாக இருக்கின்றது எனவே அடிப்படைஉரிமைகளைப் பறிக்கும் 377-வது பிரிவை நீக்க வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
ஓரினச்சேர்க்கை மற்றும் இயற்கைக்கு மாறான பாலுறவுகளை இந்திய தண்டனைச் சட்டம் 377- வது பிரிவுதண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது.
2009- ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் ”வயதுக்கு வந்த இரண்டு நபர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம்ஆகாது “ என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது அதனைத் தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு 2013- ஆம் ஆண்டுசுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது விசாரணை செய்த நீதி மன்றம் இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படிஓரினச்சேர்க்கை குற்றமென தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 2013- ஆம் ஆண்டு நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரீசிலணை செய்வதாகஅறிவித்தது மேலும் இந்த நிலையில் தான் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதி மன்றம், மனுவின்மீதான விசாரணை தேதியை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்