மின்னம்பலம்
நடிகர் சல்மான் கான் நடித்துவரும் ‘பாரத்’ படத்தில் மற்றொரு நாயகியாக திஷா பதானி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற சுல்தான் மற்றும் டைகர் ஜிந்தா ஹாய் எனும் படங்களை இயக்கியவர் அலி அப்பாஸ் ஜாஃபர். தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து பாரத் எனும் படத்தை உருவாக்கிவருகிறது. சல்மான் கானுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்துவருகிறார். இந்தப் படம் 2019 ரம்ஜானுக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் மற்றொரு நாயகியாக திஷா பதானியும் இணைந்திருக்கிறார். இந்த தகவலை படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதை வரவேற்று நன்றி தெரிவித்துள்ள திஷா, தான் ரொம்பவே எதிர்பார்ப்போடு இருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு சல்மான் கானும் திஷா பதானிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
திஷா பதானி, இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி, பாகி-2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில், சுந்தர் சி இயக்கத்தில் தயாராகிவரும் ‘சங்கமித்ரா’ எனும் பிரம்மாண்ட சரித்திரப் படத்தின் நாயகியும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.