மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

கைதியை தவறுதலாக விடுதலை செய்த அதிகாரி சஸ்பெண்ட்!

கைதியை தவறுதலாக விடுதலை செய்த அதிகாரி சஸ்பெண்ட்!

சென்னை புழலிலுள்ள மத்திய சிறைச்சாலையில் கைதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு, கைதியை விடுவித்த சிறை பாதுகாப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தண்டையார் பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் கொலை முயற்சி வழக்கில் விசாரணைக் கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் கைதி ரவி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கைதிக்கு குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்ட ஆணையை, விடுதலை ஆணை எனக் கருதி விடுவித்ததாக காவலர் பிரதீப் கூறியுள்ளார். இதையடுத்து, காவலர் பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon