மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ஜனநாயகம் ஏலம்... பணநாயகம் வாழும்: ராமதாஸ்

ஜனநாயகம் ஏலம்... பணநாயகம் வாழும்: ராமதாஸ்

கர்நாடக தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.எல்.ஏக்கள் விலை பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜனநாயகம் ஏலம், பணநாயகம் வாழும் என ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையே கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா எடியூரப்பாவை முதல்வராகப் பதவி பிரமாணம் செய்துவைத்தார். 15 நாட்களுக்கு அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அவகாசம் வழங்கியுள்ளார். எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றதற்குப் பல அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 17)தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு சட்டத்தையும் நான்கு முனை சந்திப்பில் நிற்க வைத்து படுகொலை செய்வது என்பது இது தான். அவர் தான் தன்னிடம் பெரும்பான்மை வலிமை இருப்பதாகக் கூறியிருக்கிறாரே, பிறகு எதற்கு 15 நாட்கள். குதிரைப் பேரம் இழுபறியாக இருக்கும் என்ற அச்சமோ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “கர்நாடகத்தில் ஜனநாயகம் ஏலம்.... பணநாயகம் வாழும்” என்று விமர்சித்துள்ளார். அதேபோல்,

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலை, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் நேற்று (மே16) வெளியிட்டார். அதில்,

இந்தியாவில் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இந்தூர், போபால், சண்டிகர் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் தமிழக நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை. இது தொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூய்மையான நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் இடம் பெறவில்லை. தமிழக அரசு கஜானாவை வேண்டுமானால் இந்த பட்டியலில் சேர்க்கலாம். மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்களாம் ”என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon