மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கத்துவா: சாட்சிகளின் பாதுகாப்பு வழக்கு நிராகரிப்பு!

கத்துவா: சாட்சிகளின் பாதுகாப்பு வழக்கு நிராகரிப்பு!

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதுகாப்பு கோரி சாட்சிகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 16) நிராகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கோயில் நிர்வாகி, காவல் துறையினர், ஒரு சிறார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் குற்றப்பிரிவினர் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மைனாரிட்டி முஸ்லிம் நாடோடி மக்களை வெளியேற்றுவதற்காகத் திட்டமிட்டே சிறுமியின் படுகொலை அரங்கேற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சாஹில் ஷர்மா மற்றும் சிறுவனின் இரு நண்பர்களும் தங்களை போலீஸார் கடுமையாகத் தாக்கி வாக்குமூலம் பெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

இந்த மனு மே 14ஆம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திர சூட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்ற நீதிபதிகள் 16ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்க மறுப்பு தெரிவித்து, விசாரணையை இன்று ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் அமைப்பை மாற்றுவதற்கான கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது ஒரு சாதாரணம் விஷயம் என்று காஷ்மீர் மாநில புதிய துணை முதல்வர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon