மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

பாம்பை வைத்து பூஜை-புரோகிதர் கைது

பாம்பை வைத்து பூஜை-புரோகிதர் கைது

கடலூரில் சதாபிசேக விழாவில் பாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதர் சுந்தரேசனையும்,பாம்பாட்டியையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

பாம்பை வைத்து பூஜை செய்தால் விசேஷமாக இருக்கும் என்று நண்பர்கள் ஆலோசனை கூறியதால் சதாபிசேக விழாவில் பாம்பாட்டி மூலம் பாம்பை கொண்டு வந்து பூஜை செய்தார். இந்தப் பூஜையில் கலந்து கொண்ட ஒருவர் செல்பேன் மூலம் படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் ,மேலும் இந்த வீடியே வாட்ஸ்-ஆப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் புரோகிதர் சுந்தரேசனையும்,பாம்பாட்டியையும் மிருகவதை தடுப்பு தடைச் சட்டத்தின் மூலம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon