மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

குஷ்பு நாகரீகமாக நடத்தப்பட்டார்!

குஷ்பு நாகரீகமாக நடத்தப்பட்டார்!

திமுகவில் இருந்தபோது குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு கடந்த 13ஆம் தேதி பேட்டியளித்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு,"தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் ஏற்படும். அடுத்த இரண்டு மாதங்களில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்" என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளதாக இன்று தினந்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. "குஷ்பு திமுகவில் இருந்தபோது அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் தெரியும். குஷ்புவை முட்டையால், செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்த நிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று திருநாவுக்கரசர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "முட்டை, செருப்பால் அடித்து திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் குஷ்பு’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் க.திருநாவுக்கரசர் பேசியதாக இன்றைய (மே 17) தினத்தந்தி நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார். தி.மு.க.வினர் யாருமே குஷ்புவுக்கு எதிராக, இதுபோன்று தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதுமில்லை, தாக்கவுமில்லை. இந்தச்செய்தியில் சிறிதும் உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon