மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கரும்பு விவசாயிகள் போராட்டம்: 75 பேர் கைது!

கரும்பு விவசாயிகள் போராட்டம்: 75 பேர் கைது!

மதுரையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 75 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

தேசிய கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் மூன்று ஆண்டுகளாக அரவைச் செய்த கரும்பு கொள்முதல் தொகை ரூ. 212 கோடியை உடனே வழங்க வேண்டும். மாநில அரசு வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது என்றும், கரும்பு டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.

இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, கரும்பு விவசாய சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இன்று (மே 17) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

அங்கிருந்த காவலர்கள், ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி தடுத்தனர். இதனால் விவசாயிகள் ஆட்சி அலுவலகத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் விவசாயிகளைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியும், விவசாயிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon