மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தரமற்ற உணவுகள் குறித்து குவியும் புகார்கள்!

தரமற்ற உணவுகள் குறித்து குவியும் புகார்கள்!

சென்னையில் உள்ள சாலையோரக் கடைகளில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு 2000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.

நெடுஞ்சாலை ஓரமாக விற்கப்படும் உணவுகள் சுகாதாரமற்ற முறையில் இருக்கின்றன என தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கடைகளில் சோதனையிட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர். தரமற்ற பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், காலாவதியான உணவுப் பொருட்கள் போன்றவற்றைப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்கப்படுவது குறித்து புகார் அளிக்க 9444042322 என்ற வாட்ஸ் அப் எண் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண்ணுக்கு 2464 புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உணவு சார் தொழில் செய்வோரின் பட்டியல் பராமரிக்கப்பட்டுவருகிறது. தெருவோரக் கடைகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை அனைத்து நிறுவனங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 77.4 சதவிகித உணவு விற்பனையாளர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon