மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

ரஜினியை ஆச்சரியப்படுத்திய சந்திரமுகி!

ரஜினியை ஆச்சரியப்படுத்திய சந்திரமுகி!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 74

இராமானுஜம்

வெகுஜனம் பங்கேற்காத எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெறுவது இல்லை. அதே போன்றுதான் நல்ல படமாக இருந்தாலும் பாமர மக்கள், அடித்தட்டு மக்கள் திரையரங்குகளுக்குக் கூட்டமாக வரவில்லை என்றால் அந்தப் படம் வெற்றி பெறாது.

தமிழ் புத்தாண்டையொட்டி வெளியான சச்சின், மும்பை எக்ஸ்பிரஸ் இரண்டும் வெகுஜன மக்களின் ரசனைக்கு ஏற்றபடி இல்லாததால் தோல்வியைத் தழுவின. சந்திரமுகி வெகுஜன மக்களின் பொழுதுபோக்கிற்கு ஏற்ப இருந்தது. படம் வெளியாகி இரண்டு நாட்கள் விமர்சனங்கள் அப்படத்திற்கு எதிராகவே இருந்தன. வசூலும் மந்தமாகவே இருந்தது. மூன்றாவது நாள் முதல் ஜெட் வேகத்தில் கல்லா கட்டத் தொடங்கியது.

சந்திரமுகி ரஜினி படம் அல்ல; ஜோதிகா, வடிவேல் படம் என்றார்கள் தியேட்டர் மேனேஜர்கள். அவரது படம் என்றாலே டிக்கெட் விலை 100 ரூபாய்க்கு மேல்தான் விற்கப்படும். சந்திரமுகி படத்தை குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்க்க காரணம் தொடக்க டிக்கெட் விலை புறநகர்களில் ரூபாய் 60 என்கிறார் விநியோகஸ்தர் ஒருவர்.

ரஜினி நடித்த திரைப்படங்களில் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பினராலும் பார்க்கப்பட்டிருக்கும். அந்த வரிசையில் 2005க்குப் பின் இன்று வரை ரஜினி நடிப்பில்வந்த படங்களில் அதிகப் பார்வையாளர்கள் கண்டு ரசித்த படம் சந்திரமுகி. தமிழகத்தில் 230 தியேட்டர்களில் வெளியான இப்படம் 50 நாட்களைக் கடந்து பல ஊர்களில் ஓடியிருக்கிறது. குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் குறைவான பட்ஜெட்டில் தயாரான இப்படம், அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டது. எனவே இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச லாபம் கிடைத்தது.

தான் ஹீரோவாக நடித்து வெளிவந்த படங்கள் தோல்வியைத் தருகின்றன; கதைக்குள் தான் நடித்திருக்கும் படம் விஸ்வரூப வெற்றி அடைந்தது என்பது ரஜினியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது போன்று வருடத்திற்கு இரண்டு படங்கள் எல்லா ஹீரோக்களும் குறைவான பட்ஜெட்டில் நடித்தால் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூல் ஆரோக்கியமாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் கூறினார்கள். ஆனால் இன்று வரை எந்த ஹீரோவும் அதனைக் கடைப்பிடிக்கவும் இல்லை, யதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளவும் தயாராக இல்லை. குறிப்பாக சந்திரமுகி கற்றுத் தந்த அனுபவங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

சந்திரமுகிக்குப் பின் ரஜினி தன் சம்பளத்தை உயர்த்தினார். அதன் பலனை ஏ.வி.எம். தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் அறுவடை செய்தார்.

ஆனால், சிவாஜி படமும் சில பாடங்களைக் கற்றுத் தந்தது. அவை என்ன? நாளை மதியம் 1 மணிக்கு.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57 பகுதி 58 பகுதி 59 பகுதி 60 பகுதி 61 பகுதி 62 பகுதி 63 பகுதி 64 பகுதி 65 பகுதி 66 பகுதி 67 பகுதி 68 பகுதி 69 பகுதி 70 பகுதி 71 பகுதி 72 பகுதி 73

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon