மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்

கன்னடத்தில் களமிறங்கும் தனுஷ்

தமிழ், மலையாளத் திரைப்படங்களைத் தொடர்ந்து கன்னடத் திரைப்படத் துறையிலும் தனது பயணத்தைத் தொடங்குகிறார் தனுஷ்.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட கலைஞராக இருந்த தனுஷ் தயாரிப்புத் துறையிலும் கால் பதித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வருகிறார். அவரது நிறுவனமான வுண்டர் பார் தயாரிப்பில், 2015ஆம் ஆண்டு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். இப்படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் நடித்திருந்தனர். இதில் காது கேளாத பெண்ணாக நடித்த நயன்தாரா அனைவரது மனதிலும் இடம்பிடித்தார். மேலும் அனிருத் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆகின.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்கிறார் தனுஷ். நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும், விஜய் சேதுபதி கேரக்டரில் ரிஷியும் நடிக்கிறார்கள். ஸ்லுத்தின் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்குகிறது. தமிழ், மலையாளப் படங்களைத் தொடர்ந்து இப்போது கன்னடப் படவுலகிலும் தனுஷ் தயாரிப்பாளராக கால் பதிக்கிறார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon