மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பில் பேசிய நபர், புதுச்சேரியின் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இந்த தகவல் புதுச்சேரி காவல்துறைக்குத் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டில், புதுச்சேரி மாநில காவல் கண்காணிப்பாளர் ரஞ்சனா சிங் தலைமையில் போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சுமார் ஒரு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரியவந்தது. மேலும்,ரங்கசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வீட்டின் முன் குவிந்தனர்.

அந்தவேளையில், கோரிமேடு கோவிலில் தரிசனத்தில் இருந்த ரங்கசாமி, அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்றும், அதைப்பற்றி தனக்கு அச்சமில்லை எனவும் கூறி தரிசனத்தை தொடர்ந்தார்.

இந்நிலையில் ரங்கசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon