மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

அனைவருக்கும் வீடு சாத்தியமா?

அனைவருக்கும் வீடு சாத்தியமா?

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ’அனைவருக்கும் வீடு’ திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 கோடி வீடுகள் கட்டித் தர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டத்தின்படி கிராமப்புறங்களில் 1 கோடி வீடுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல நகர்ப்புறங்களில் 1.18 கோடி வீடுகள் 2020ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2018ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் கட்டப்படும் 1 கோடி வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதுவரையில் 45 லட்சம் வீடுகளுக்கான பயனாளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் திட்டம் ஏழை மக்களின் வாழ்வையே மாற்றி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும். 2019ஆம் ஆண்டுக்குள் இரண்டாம் கட்டமாக ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக அடுத்த தேர்தலுக்கு முன்பாக கிராமப்புற ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவோம்" என்றார்.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

வியாழன் 17 மே 2018