மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 மே 2018

சூர்யா: ‘என்ஜிகே’ ஷூட்டிங் அப்டேட்!

சூர்யா: ‘என்ஜிகே’ ஷூட்டிங் அப்டேட்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா - செல்வராகவன் முதன்முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிக்கும் முன்னரே இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்றது. அம்பாசமுத்திரத்தை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பை நேரடியாக அங்கு நடத்தினால் உருவாகும் நடைமுறைச் சிக்கல்களை கருத்தில் கொண்டு அம்பாசமுத்திரத்தின் முக்கியத் தெருக்களை சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கு அமைத்தனர். வேலை நிறுத்தம் முடிவடைந்த பின் தொடங்கிய படப்பிடிப்பில் ரகுல் ப்ரீத் சிங் கலந்து கொண்டார்.

தற்போது சென்னை படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பொள்ளாச்சியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இருபது நாள்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. சூர்யா, சாய்பல்லவி, இளவரசு, பாலா சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

5 நிமிட வாசிப்பு

இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு!

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

5 நிமிட வாசிப்பு

கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலமாகும்: காரணம் என்ன?

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

3 நிமிட வாசிப்பு

14 மணி நேரம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது!

வியாழன் 17 மே 2018