மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 30 மே 2020

பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது!

பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியாது!

தமிழகத்தில் அதிமுக சீனியர் சாம்பியனாக இருக்கும் போது ஜுனியர்களான பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தலில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பலத்த எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

டெல்லியில் இன்று (மே 17) அனைத்து மாநில நீர்வள அமைச்சர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி செல்லும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் தற்போது நடைபெறும் போட்டி அரசியல் நேற்று இன்று நாளை என மாறி மாறி வருகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறிய ஜெயக்குமார், கர்நாடகாவில் வேண்டுமானால் ஆட்சிகள் மாறலாம் தமிழகத்தில் சீனியர் சாம்பியனாக நாங்கள் இருக்கும் போது ஜூனியர்கள் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது என்று பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், “தமிழக மீனவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் டெல்லியில் நடைபெறும் அனைத்து மாநில நீர்வள அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். காவிரி மேலாண்மை வாரியம் காவிரி ஒழுங்காற்று குழு அமைந்தாலே தமிழகத்துக்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேறியுள்ளது. உச்ச நீதிமன்றம் இன்று நல்ல தீர்ப்பை வழங்கும் என்ற டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைந்தாலே தமிழகத்துக்கு இடைக்காலத்தில் கிடைக்க வேண்டிய 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon