மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நாம தூக்கி வீசுற கல்லோட தூரம் என்பது, நாம தூக்கி வீசுற விசையை பொருத்ததுதான். அந்த விசை எப்போ தீர்ந்திடுதோ, அப்போ புவியீர்ப்பு விசை செயல்பட்டு கல்லை கீழே இழுத்துடுது.

சரி, இப்போ ஒரு கேள்வி கேக்கட்டா குட்டீஸ்?

நாம தூக்கி வீசுற விசை தீரவே இல்லைனா என்ன ஆகும்? கரெக்ட்! கல் பறந்துட்டே இருக்கும். இதேதான் விமானத்தோட அறிவியலும். விமானம் பறப்பதற்கு உறுதுணையாக இருப்பது இறக்கைகள் மட்டும் அல்ல. அதோட இயந்திரங்களும்தான். ஒரு பறவை பறக்கும்போது அதோட அசையுற இறக்கைகள் என்ன வேலை செய்யுதோ, அதே வேலையைதான் நிலையா இருக்குற விமானத்தின் இறக்கைகளுக்காக இயந்திரங்கள் செய்யுது.

அதாவது, விமானத்தின் இரு புறங்களிலும் இருக்கிற இயந்திரங்கள் தொடர்ந்து விசை கொடுத்துட்டே இருக்கு. விசை இருந்துட்டே இருந்தா கல் பறந்துட்டே இருக்கும்ல. அதே மாதிரி விசை இருந்துட்டே இருக்கிறதுனால விமானம் பறந்துட்டே இருக்கு.

அப்போ நிலையாக நிற்கிற இறக்கைகளோட வேலைதான் என்ன?

இங்கதான் முக்கியமான அறிவியல் இருக்கு. அந்த இயந்திரங்கள் விமானத்துக்கு விசை கொடுத்து முன்னேறச் செய்யுமே தவிர, பறக்க வைக்க அவை உதவி பண்ணாது. விமானம் பறப்பதற்கு இறக்கைகளுக்கு கீழே செயல்படும் காற்றின் அழுத்தம்தான் காரணம்.

இன்னும் சுலபமா புரிஞ்சுக்கணும்னா, விமானம் முன்னே செல்வதற்குத் துணை புரிந்து விசை கொடுப்பது இயந்திரங்கள். அந்த விசையைக் கொண்டு மேலே பறப்பதற்கும், மிதப்பதற்கும் துணை புரிவது இறக்கைகள்!

அவ்ளோதான் குட்டீஸ். எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும், அவற்றை நாம ரொம்ப சுலபமா புரிஞ்சுக்கலாம்.

எப்படியோ உங்க கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைச்சிடுச்சுன்னு சந்தோஷப்படாதீங்க!

இன்னும் நிறைய கேள்விகள் வரிசை கட்டி நிக்குது.

நீங்க ரெடியா?

- நரேஷ்

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon