மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 5 ஜுன் 2020

தர வரிசையில் அசத்திய அறிமுக வீரர்கள்!

தர வரிசையில் அசத்திய அறிமுக வீரர்கள்!

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரு அணிகளின் அறிமுக வீரர்களும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

34 வயதான அயர்லாந்தின் ஆல் ரவுண்டர் கெவின் ஓ பிரைன் அயர்லாந்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 40 மற்றும் 118 ரன்களை எடுத்தார். இதுவே இரண்டு இன்னிங்ஸிலும் அந்த அணியின் தனிநபர் அதிகபட்ச ரன்னாகும். இதன் மூலம் 440 புள்ளிகளுடன் டெஸ்ட் தர வரிசையில் 66ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தப் போட்டியில் அரை சதம் அடித்த மற்றோர் ஆட்டக்காரரான ஸ்டூவர்ட் தாம்சன் 218 புள்ளிகள் பெற்று பேட்டிங் தர வரிசையில் 125ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் (3/62 மற்றும் 1/31) அசத்திய இவர், பந்து வீச்சு தர வரிசையில் 88ஆவது இடத்தையும், ஆல்ரவுண்டர்கள் தர வரிசையில் 76ஆவது இடத்தையும் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், கெவின் ஓ பிரைன் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அறிமுக வீரர் பாஹீம் அஷ்ரப் 81ஆவது இடத்தையும், பாபர் அசாம் 113ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon