மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 1 டிச 2020

சென்னையில் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி!

சென்னையில் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி!

இந்தியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ரயில் பெட்டிக் காட்சி சென்னையில் நாளை முதல் மூன்று நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

சென்னையில் உள்ள ஐசிஎஃப் ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை சார்பாக ஆர்பிஎஃப் கவாத் மைதானத்தில் (இன்று) மே 17 முதல் 19 வரை நடைபெறுகிறது. இக்காட்சியில் உலகின் புகழ்பெற்ற ரயில் பெட்டி மற்றும் சாதனத் தொழிற்சாலைகள் தங்களது உற்பத்திப் பொருள்களையும், தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்துகின்றன. பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காட்சியாளர்கள் பங்கேற்கும் இக்காட்சியில் புதுமைப் படைப்பு மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தும் உற்பத்திப் பொருள்களை ரயில் பெட்டி உற்பத்தியாளர்கள் காட்சிப்படுத்துகிறார்கள்.

இக்காட்சியில் முக்கிய அம்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில் பெட்டி வடிவமைப்புக் காட்சிப்படுத்தப்படுகிறது. பெட்டிகளின் உள்பகுதி, பயணியர் வசதிகள், இதர சொகுசு அம்சங்கள் உள்ளிட்ட ரயில் பெட்டி வடிவமைப்புகளும் இக்காட்சியில் இடம்பெறுகின்றன. இன்று முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறும் இக்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon