மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 17 மே 2018

இந்தியாவுடன் உஸ்பெகிஸ்தான் ஒப்பந்தம்!

இந்தியாவுடன் உஸ்பெகிஸ்தான் ஒப்பந்தம்!

இந்தியாவின் ஜவுளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இணைந்து செயல்பட உஸ்பெகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான உஸ்பெகிஸ்தான் நாட்டுத் தூதர் அர்ஜீவ் மே 14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்களில் குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் இந்தியாவின் ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவமனைகள், சுற்றுலா, மருந்து உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளையும் தொழில் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். மே 15ஆம் தேதி இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கும் துறைகள் பற்றிப் பேசியதோடு, இந்தியாவின் குறிப்பிட்ட சில துறைகளில் உஸ்பெகிஸ்தான் முதலீடு செய்ய மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பின் தலைவரான ராஜிவ் வஸ்துபார்ல் பிசினஸ் லைன் ஊடகத்திடம் பேசுகையில், “உஸ்பெகிஸ்தான் நாடு இப்போது முற்றிலும் மாறிவிட்டது. அங்குள்ள உள்நாட்டு கரன்சியை 100 சதவிகிதம் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளதோடு, வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த தேவைகளுக்கு வங்கிகள் விரைவில் உதவிபுரிகின்றன. உஸ்பெகிஸ்தான் நாட்டுத் தூதருடனான சந்திப்பில் இந்தியாவின் பல்வேறு தொழில் துறைகளைச் சார்ந்த தொழில் தலைவர்களும் பங்கேற்றனர். உஸ்பெகிஸ்தானில் வரியற்ற வர்த்தகத்துக்கு இருக்கும் சலுகை சிறந்த வாய்ப்பாகும்” என்றார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அடுத்த வாரத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon