மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 4 ஜுன் 2020

பரிவர்த்தனை இலக்குடன் பேடிஎம்!

பரிவர்த்தனை இலக்குடன் பேடிஎம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் பேடிஎம் வாயிலான பரிவர்த்தனையை மாதம் ஒன்றுக்கு ரூ.60,000 கோடியாக அதிகரிக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பேடிஎம் வாயிலான வங்கிப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய இலக்கின்படி ஆண்டுக்கு 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகளை இந்தத் தளத்தின் மூலம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளோம். பாதுகாப்பான வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை பேடிஎம் வங்கி வருகிறது. இந்தத் தளத்தின் மூலம் வீட்டு வாடகை, தொழில் பரிவர்த்தனை, கல்விக் கட்டணங்கள் செலுத்துதல் போன்ற பல வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு எளிமையான தீர்வு தேவைப்படுகிறது. இந்தச் சேவைக்கு பேடிஎம் பயன்படுகிறது’ என்று கூறியுள்ளது.

இந்த நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை 100 கோடியிலிருந்து 200 கோடியாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் சாஃப்ட் பேங்க் நிறுவனத்திடம் 140 கோடி டாலர் நிதியை இந்நிறுவனம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon