மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

ரயில்: பெண்களின் பாதுகாப்புக்கு பேனிக் பட்டன்!

ரயில்: பெண்களின் பாதுகாப்புக்கு பேனிக் பட்டன்!

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்களில் பேனிக் பட்டன் பொருத்தப்படும் மற்றும் இரவு நேரங்களில் பெண் போலீஸார் பணியில் இருப்பார்கள் என வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே கவனம் செலுத்துவதால், நகர்ப்புற பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களில் பெண் போலீஸாரைப் பணியமர்த்த ரயில்வே காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், பெண்கள் இருக்கும் ரயில் பெட்டியை எளிதில் கண்டறிய வித்தியாசமான கலர் பெயின்ட் அடிக்க வேண்டும் என வடகிழக்கு ரெயில்வே தலைமை பி.ஆர்.ஓ. சஞ்சய் யாதவ் கூறியுள்ளார்.

சமீப காலமாக ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைந்துவருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெண்கள் பயணிக்கும் பெட்டிகளில் பேனிக் பட்டன் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த பட்டன் பெண்களுக்கு எளிதில் எட்டும் உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும். தங்களுக்கு அவசர உதவி தேவைப்படும்போது இந்த பட்டனை அழுத்தினால், உடனடியாக அதிகாரிகள் அந்தப் பெட்டிக்கு வருவார்கள். இந்த நடவடிக்கை இந்தாண்டுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.

மேலும், பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சஞ்சய் யாதவ் கூறினார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon