மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 22 அக் 2019

இறக்குமதிச் சரிவுக்குக் காரணமான தங்கம்!

இறக்குமதிச் சரிவுக்குக் காரணமான தங்கம்!

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 33 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வர்த்தகம் 5.2 விழுக்காடு உயர்வைக் கண்டு 25.91 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இறக்குமதி 4.6 விழுக்காடு உயர்வு கண்டு 39.63 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறையைப் பொறுத்தவரையில் 13.72 பில்லியன் டாலர்களாக உள்ளது. முந்தைய மாதத்திலும் வர்த்தகப் பற்றாக்குறை இதே அளவில்தான் இருந்தது. தோல் பொருள்கள், நகைகள் மற்றும் ரத்தினங்கள், ஆடைகள் ஆகியவற்றின் வர்த்தகம் சரிந்துள்ளது. அலாரம் பெல்கள் உற்பத்தித் துறைக்கான தேவை ஏப்ரல் மாதத்தில் வலுவாக இருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் சில துறைகளின் செயல்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் சிறப்பான ஒன்றாக இல்லை. இதில் தங்கத்தின் இறக்குமதி 33 விழுக்காடு சரிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 2.6 பில்லியன் டாலர் மதிப்புடைய 57 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 10.41 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் பொருள்கள் ஏப்ரலில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஏப்ரலைக் காட்டிலும் 41.5 விழுக்காடு அதிகமாகும்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon