மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

நஸ்ரியா வருகைக்கு நாள் குறித்த படக்குழு!

நஸ்ரியா வருகைக்கு நாள் குறித்த படக்குழு!

நீண்ட இடைவெளிக்குப் பின் நஸ்ரியா நடிப்பில் வெளியாகவுள்ள புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம், வாயைமூடி பேசவும், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நஸ்ரியா. 2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் பகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த நஸ்ரியா தற்போது, ‘பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கும் மலையாளப் படத்தில் நடித்துள்ளார். பிரித்வி ராஜ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா, பார்வதி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் தலைப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஜூலை 6ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜெயசந்திரன் மற்றும் ரகு தீட்சித் இசையமைத்துள்ளனர். லிட்டில் ஸ்வாயாப் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பிரபாகர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளனர். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon