மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

நிர்மலா விவகாரம்: ஆறு மணி நேரத்துக்கு மேல் விசாரணை!

நிர்மலா விவகாரம்: ஆறு மணி நேரத்துக்கு மேல் விசாரணை!

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 36 பேரிடம் ஆறு மணி நேரத்துக்கு மேலாக சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்கு அழைத்ததற்காக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஏப்ரல் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிபிசிஐடி போலீஸார் உதவிப் பேராசிரியர் முருகனையும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில்,நேற்று (மே 16) நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி முத்துசங்கரலிங்கம் தலைமையிலான குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை நடத்தியது. ஆறு மணி நேரத்துக்கும் மேலாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட 36 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், இந்த விசாரணையானது இன்றும் தொடரும் என்று சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். நிர்மலா தேவி, பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய சந்தானம் கடந்த 14ஆம் தேதி ஆளுநரிடம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon