மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

செல்ஃபி பிரியர்களுக்காக ஒன் ப்ளஸ் 6

செல்ஃபி பிரியர்களுக்காக ஒன் ப்ளஸ் 6

ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் புதிய படைப்பான ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் நேற்று (மே 16) லண்டனில் அறிமுகமாகியுள்ளது. இன்று இந்தியாவில் இந்த போனின் அறிமுக விழா நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 21ஆம் தேதியில் இருந்து இணையம் மற்றும் ஒன் ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.28 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 ப்ராஸசர் மற்றும் 8 ஜிபி ரேமுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 36,999 ரூபாய் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 39,999 ரூபாய் ஆகும்.

ஒன் ப்ளஸ் போன்களின் சிறப்பம்சம், அந்த போன்களிலுள்ள கேமராக்கள் தான். இந்த ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனிலும் கேமரா ஈர்க்கக்கூடியதாக உள்ளது. இரண்டு பின் கேமராக்களை கொண்டுள்ள இந்த ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் ஒன்று 20 மெகா பிக்செல், மற்றொன்று 16 மெகா பிக்செல். மேலும் செல்ஃபி பிரியர்களைக் கவர 16 மெகா பிக்செல் கொண்ட முன் கேமரா பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன் ப்ளஸ் நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போனை பிரபலப்படுத்துவதற்குப் பல அதிரடி சலுகைகளை வழங்கிவருகிறது. இதில் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை முதல் வாரத்தில் வாங்குபவர்களுக்கு 2,000 ரூபாய் தள்ளுபடி வழங்கியுள்ளது. மேலும், மூன்று மாத தவணைகளுக்குக் கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை. இது தவிர ஒவ்வொரு ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் 12 மாதம் காப்பீட்டையும் இலவசமாக வழங்குகிறது.

அமேசான் பிரைம் வீடியோ பயனாளர்களுக்கு 250 ரூபாய் பரிசு கூப்பன் மற்றும் அமேசான் கிண்டில் வாடிக்கையாளர்களுக்கு 500 ரூபாயும் அந்த ஆஃபரின் மூலம் கிடைக்கும். மேலும் ஐடியா வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் கேஷ் பேக் சலுகையும் பெறலாம்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon