மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

தன்னாட்சிமிக்க மேலாண்மை வாரியம் வேண்டும்!

தன்னாட்சிமிக்க மேலாண்மை வாரியம் வேண்டும்!

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்துள்ள நிலையில், தன்னாட்சி அதிகாரமில்லாத அமைப்பு விசை ஒடிந்த அம்பு போன்றது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. காவிரி தொடர்பான வழக்கு நேற்று (மே 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மேலாண்மை வாரியத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும், மேலாண்மை வாரியத்தின் தலைமையகம் டெல்லியில் அமைக்க வேண்டும், நதிநீர் பங்கீட்டில் வாரியம் மட்டுமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசு முன்வைத்தது.

இதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து இன்று (மே 17) திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மேலாண்மை வாரியம் இருக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் நேற்று (மே 16) வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், “தன்னாட்சி அதிகாரம் இல்லாத காவிரி மேலாண்மை வாரியம் விசை ஒடிந்த அம்பைப் போன்றது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நாளை தாக்கல் செய்யும் வரைவு திட்டத்தில் தன்னாட்சி மிக்க, மேலாண்மை வாரியம் அமைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 17 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon