மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

மாணவர்களே மன அழுத்தமா?

 மாணவர்களே மன அழுத்தமா?

விளம்பரம்

ஹலோ... அன்பு மாணவச் செல்வங்களே!

ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. இந்த பதின்ம வயதில் இந்தத் தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே தவிர, இதுவே முழுமையான வாழ்க்கையில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

மதிப்பெண்கள் குறைந்துவிட்டது என்றோ, தேர்வில் தோல்வி கண்டுவிட்டோம் என்றோ யாரும் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். போட்டி உலகத்தில் மதிப்பெண்களை விட உங்கள் மன திடமே முக்கியம். எதை இழந்தாலும் இதயம் இழக்காதீர்கள்.

அப்பா அம்மாக்களும், பக்கத்து வீட்டு பெரியமனிதர்களும், ஏன் சில ஆசிரிய மகான்களும் கூட... இன்னும் சில நாட்களுக்கு உங்கள் மதிப்பெண்களைப் பற்றியே பேசக் கூடும். அதனால் பதற்றம் அடையாதீர்கள். இந்த வருடம் எந்த மாணவரும், தேர்வில் தோல்வி என்பதற்காகவோ மதிப்பெண் குறைந்தது என்பதற்காகவோ உயிரை முடித்துக் கொள்ளும் விபரீதத்துக்கு சென்றுவிடக் கூடாது.

தம்பிகளே தங்கைகளே... ரிசல்ட் வந்துவிட்ட நிலையில் யாருடனும் பேசப் பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம். ’மைண்ட் சோன்’ உடன் பேசுங்கள். அலைபேசியிலேயே உங்களுக்கு ஆலோசனை சொல்ல தொழில்முறை உளவியல் நிபுணர்களும், கைதேர்ந்த மனநல ஆலோசகர்களும் காத்திருக்கிறோம். உங்கள் மனசுக்கு நெருக்கமாக இருக்கிறது ’மைண்ட் சோன்’

16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு போன் பண்ணுங்கள். உங்கள் மனதுக்கு உரமூட்ட காத்திருக்கிறோம். வாழ்க்கை இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது! வாழ்வோம் சாதிப்போம்!

மைண்ட் சோன் மன நல மருத்துவமனை அடையாறு, சென்னை-20

விளம்பர பகுதி

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon